முடக்கப்படுமா யாழ்.மாவட்டம்? மாவட்ட செயலர் விளக்கம்

யாழ்.மாவட்டம் மீண்டும் முடக்கப்படாமல் இருப்பதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
மாவட்டத்தின் தற்போதைய நிலை தொர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் தற்போது சுமார் 610 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். மாவட்டம் மீண்டும் முடக்கப்படாமலிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் அவர் கூறினார்.
மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், நேற்றய தினமும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் இதுவரை 213 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தற்போதுவரை 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது, 258 குடும்பங்களை சேர்ந்த 610 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார்.