March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

14 நாடுகளில் பரவிய 3 ஆவது வகை கொரோனா வைரஸ்; ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை

உருமாறிய 3 ஆவது வகை கொரோனா வைரஸானது 14 நாடுகளில் பரவியுள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

தற்போது உருமாறிய 3 ஆவது வகை கொரோனா வைரஸ், 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து நாட்டிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டவை. இரு வகை கொரோனா வைரஸ் என்றும், மூன்றாவது வகை வைரஸ், பிரேசில் நாட்டின் அமேசனோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் முன்பிருந்த.கொரோனா வைரஸை விட வீரியமிக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.