February 25, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

வீட்டை உடைத்து நகைகள் பணம் கொள்ளை; மூவர் கைது

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் வீட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு வேளை அம்பாறை சம்மாந்துறை மலையடி கிராம பிரதேசத்தில் வீடுடைத்து தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர பிரிவிற்கு முறைப்பாட்டு கிடைக்கப்பெற்றிருந்தது.

அந்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க மூன்று சந்தேக நபர்கள் காலை கைது செய்யப்பட்டனர்.

இதன் போது அவர்களிடம் இருந்து களவாடப்பட்ட 5 1/2 பவுண் தங்க நகைகளும் மற்றும் 19,500 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைதான மூவரும் இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.