February 28, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

வடமாகாணம் முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்; முன்மாதியாக போட்டுக்கொண்ட உயர் சுகாதார அதிகாரிகள்

1 min read

வடமாகாணம் முழுவதும் இன்று காலை 8.30 மணி தொடக்கம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய கொவிட்-19 தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை நேற்றய தினம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.

அந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து 3 நாட்களுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரச மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி உள்ளிட்ட உயர் சுகாதார அதிகாரிகள் முன்மாதிரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.