March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

மட்டக்களப்பில் மாடு மேய்க்க சென்ற நால்வர் கைது!

மட்டக்களப்பு கெவிளியாமடுவில் மாடுமேய்க்க சென்ற நால்வரை மங்களகம பொலிசார் கைதுசெய்த பொலிஸார் அவர்களை பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

மகிழடித்தீவு தெற்கை சேர்ந்த சொர்ணலிங்ம், குருகுலசிங்கம், மகேஸ்வரலிங்கம், நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த யோகநாதன் ஆகிய நான்கு பேருமே கைதான நிலையில் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி அம்பாறை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மயிலத்தமடுவில் மாடுமேய்க்கச் சென்ற ஏழுபேரை அங்குள்ள தென்னிலங்கையர்கள் அடித்து துன்புறுத்தி மங்களகம பொலிசாரிடம் ஒப்படைத்து நீதிமன்றில் கொண்டு சென்று பிணையில் விடுவித்து தற்போது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் தரைகளை அத்துமீறி அபகரிப்பதும் சேனைப் பயிர்செய்கை, முந்திரிசெய்கை என்ற போர்வையில் திட்டமிட்ட குடியேற்றம் செய்வதற்காக நேரடியாக பண்ணையாளர்களை குண்டர்களை கொண்டு அச்சுறுத்துவதும், பொலிசாரை கொண்டு கைது செய்வதும் அங்கு தொடர்கதையாக உள்ளதாக மட்டக்களப்பு பண்ணையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.