உலக அளவில் கொரோனா பரவலை சிறந்த முறையில் கையாண்ட முதல் 10 நாடுகளில் இருக்கும் இலங்கை!
1 min read
கொரோனா கிருமிப்பரவல் சூழலை ஆகச் சிறந்த, ஆக மோசமான முறையில் கையாண்ட நாடுகளின் பட்டியலை ஆஸ்திரேலியாவின் Lowy Institute வெளியிட்டுள்ளது.
இறப்புவிகிதம், பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள், கோவிட் சோதனை உட்பட 6 அம்சங்களின் அடிப்படையில் சுமார் 98 நாடுகளை ஆய்வு செய்த அதனடிப்படையில் குறித்த நாடுகளை Lowy Institute பட்டியலிட்டுள்ளது.
இதன்படி ஆகச் சிறந்த முறையில் கிருமிப்பரவலைக் கையாண்ட நாடாக நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8வது இடத்திலுள்ளது. இந்தியா 86வது இடத்திலுள்ளது. போதிய தரவுகள் கிடைக்காததால் சீனா இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை.
முதல் 10 இடங்களிலுள்ள நாடுகளின் விபரங்கள் வருமாறு:
1. நியூஸிலாந்து
2. வியட்நாம்
3. தைவான்
4. தாய்லாந்து
5. சைப்ரஸ்
8. ருவாண்டா
7. ஐஸ்லாந்து
8. ஆஸ்திரேலியா
9. லாத்வியா
10. இலங்கை
கடைசி 10 இடங்களிலுள்ள நாடுகள்:
89. சிலே
90. உக்ரெய்ன்
91. ஓமான்
92. பனாமா
93. பொலிவியா
94. அமெரிக்கா
95. ஈரான்
96. கொலம்பியா
97. மெக்ஸிக்கோ
98. பிரேஸில்