இரண்டாம் நாளான இன்று 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது
1 min read
Published by T. Saranya on 2021-01-30 22:15:38
இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
முதலாம் நாளான நேற்று 2280 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று 32,539 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேச வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அத்துடன் இதுவரை மொத்தமாக 37,825 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.