March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

மட்டக்களப்பில் மாணவர்களிடையே பரவும் கொரோனா – பல மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

1 min read

Published by T. Saranya on 2021-01-29 12:46:20

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருகின்றது.

மட்டக்களப்பு நகரில் பிரபல கனிஷ்ட பாடசாலையான கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு  மாணவனுக்கு கொரோனா தொற்று இன்று (29.01.2021) காலை கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

இம்மாணவானுக்கு தொற்று உறுதியானதையடுத்து குறித்த பாடசாலையில் அம்மாணவனின் வகுப்பில் பயிலும் 30 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான மாணவனின் தாதி உத்தியோகத்தரான தந்தை ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாகி சிகச்சை பெற்றுவரும் நிலையில் மகனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில தினங்களின் முன்னர் மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித மிக்கேல் கல்லூரியின் 10 ஆம் ஆண்டு மாணவனுக்கும் கொரோனா தொற்று ஏறபட்டுள்ள நிலையில், பல மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.