March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் பகுதியில் பெரும் சோகம்; பரிதாபமாக பலியான இருவர்

1 min read

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் இருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் குறித்த இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று காலை மன்னார் பொலிஸாரால் மீட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ்ப்hணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக அமைத்த மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பிரதேச வாசிகள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றதுடன், அது தொடர்பில் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கும் அரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர்.

அதன் பின்னர் இருவரது சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.