March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடினார் நோர்வே தூதுவர்

இலங்கைக்கான நோர்வே தூதர் திரினா யுரான்லி எஸ்கடெல் நேற்று (28) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார்.

இதன்போது கொரோனா அச்சுறுத்தலில் இராஜதந்திர உதவிகளின் முக்கியத்துவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தூதரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந் நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷா டி சில்வா, எரான் விக்ரமரத்ன, நிரோஷன் பெரேரா, டாக்டர் ரோஹன் பல்லேவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.