மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்
1 min read
Published by T. Saranya on 2021-01-28 21:49:00
மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார் தனது 94 ஆவது வயதில் இன்று மாலை (28.01.2021) காலமானார்.
ஈழத்து எழுத்துலக வரலாற்றில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வந்துள்ளார்.
இலக்கியவாதி, படைப்பாளி, மல்லிகை ஆசிரியராக அவர் ஆற்றிய பணி இலக்கிய உலகு நன்கறிந்தது. இலங்கையில் தமது நூலுக்கு முதன்முதலில் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளரும் இவரே.
இலங்கை தமிழக இலக்கிய உறவுக்கு ஒரு பாலமாகவும் விளங்கியவர் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா . அன்னாரின் மறைவு ஈழத்து இலக்கிய உலகிற்கோர் பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.