பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு அடுத்த மாதம் முதல் விலை அதிகரிப்பை மேற்கொள்ளப் போவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்கு அரசாங்கம் வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்படி வரிவிதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்குமானால் விலை அதிகரிப்பை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.