கோத்தாபயவிற்கு கிடைத்த மோடியின் முக்கிய உதவி
1 min readஇந்தியா அனுப்பி வைத்துள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பெற்றுக்கொண்டார்.
இந்தியா வழங்கும் 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அவற்றை கையளித்தார்.