இன்று தைப் பூசம்
1 min read
இன்று தைப் பூசம் ஆகும்.
தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
இந்தத் திருவிழாவானது இலங்கை மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனோசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெகு விமரிசையாக நடைபெறும்.
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
இன்றைய தினத்தில் இந்துக்கள் முருகனை நினைத்து தைப்பூச விரதம் இருப்பார்கள். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிவரும் நாளில் தைப்பூச விழா இடம்பெறுவது வழக்கமாகும். இதனை முன்னிட்டு இந்துக்கள் செறிந்து வாழும் நாடுகளில் விசேட பூஜைகள் இடம்பெறும். தைப்பூச தினத்தன்று யாழ்ப்பாண புதிர் எடுப்பார்கள். புதுமனைப் புகுதல் முதலான சடங்குகளும் சிறப்பிடம் பெறும்.
இதேவேளை பௌத்தர்கள் இன்று துருது பௌர்ணமிக்கான தான, தர்ம, புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். இதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் முயற்சிக்கு அமைய இளைஞர், யுவதிகள் பங்கேற்கும் ஷீல சமாதி தியான நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அறநெறியில் ஒழுங்கும் இளம் தலைமுறையைக் கட்டியெழுப்புவது இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் பங்கேற்பார். இளைஞர் அலுவலகள் மற்றும் விளiயாட்டுத் துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் போன்றவற்றுடன் சர்வதேச அமைப்புக்களும் ஷீல சமாதி தியான நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.