நிறுத்தப்பட்ட கார் மீது லொறி மோதியதில் தயாயும் பிள்ளையும் காயம்
1 min read
Published by T. Saranya on 2021-01-27 15:39:26
யாழ்ப்பாணம் ஏ – 9 வீதியில் நேற்றைய தினம் காரொன்றுடன் லொறி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காரொன்றில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த நிலையில், உணவருந்துவதற்காக மதவாச்சிக்கு அண்மையில் ஏ-9 வீதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
உணவருந்தியதன் பின்னர் தாயும் பிள்ளையும் காரில் ஏறி அமர்ந்திருந்துள்ளனர்.
இதன்போது பின்னாலிருந்து வந்த லொறியொன்று குறித்த காரின் மீது மோதியதுடன் காரின் முன்னாலிருந்த முச்சக்கரவண்டிகள் இரண்டின் மீதும் மோதியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த தாயும் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.