நீர்கொழும்பு சிறையில் கைதிகளின் நடத்தை ; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய விருந்து வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் கைதிகள் கூடியிருந்து ஆடிப்பாடி, விருந்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த விருந்து நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருத்த சம்போயோவின் காலத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அனுருத்த சம்போயோ, சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விவகாரத்தில் வழக்கு விசாரணைணை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.