March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

இந்தியாவை சொந்தம் கொண்டாட இந்த ஓர் இனத்துக்குமட்டுமே உரிமையுண்டு! அது யார் தெரியுமா?

1 min read

இந்தியா என்ற நாடு இருக்குமெனில் அதை சொந்தம் கொண்டாட ஓர் இனத்துக்குமட்டும் உரிமையுண்டு. அது வேறுயாருமல்ல முதலில் தோன்றிய தமிழர்க்கு மட்டுமே..

சொன்னவர்கள் இரு மாமனிதர்கள் *சட்ட மாமேதை டாக்டர்.B.Rஅம்பேத்கர்* மற்றும் மேற்குவங்காள முன்னாள் முதல்வர் *ஜோதிபாசு..*

மறுபிறவி இருக்குமெனில் தமிழ் அன்னைக்கு வீர மகனாக பிறப்பேன் என முழக்கமிட்டவர் யாசகம் கேட்டு வாங்கக்கூடாது போராடி பெறவேண்டும் சுதந்திரம் என கர்ஜித்த *நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ்..*

*பணிந்து போக நனைந்த கோழிகள் அல்ல தமிழர்கள் புலிகள்* என புகழாரம் சூட்டி, ஆட்சிமொழியாக்கினார் தமிழை.! சிங்கப்பூரை சிறப்படையச் செய்த முதல் *பிரதமர் லீ குவான் யூ..*

தமிழனை ஆரம்பகாலத்தில் உலகறியச்செய்தவர்கள் *சோழர்கள்..*

யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறிய *கனியன் பூங்குன்றனாரும்*, உலகப்பொதுமறையான திருக்குறளை இயற்றிய *திருவள்ளுவரும் தமிழர்களே.!*

சீனாவுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுத்தந்த *போதி தர்மரும்* தமிழரே. மின்னஞ்சல் கண்டுபிடித்த *சிவா அய்யாத்துரை தமிழரே..*

இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது வாங்கிக்கொடுத்த திலீப் என்ற *ஏ.ஆர்.ரகுமான் தமிழரே.*

தெற்காசிய நாடுகளை ஆண்டவனும் தமிழனே, தென்குமரியின் லெமூரீயா கண்டத்தில் பிறந்தவனும் தமிழனே, உலக மொழிக்கெல்லாம் தாய்மொழியான தமிழுக்கு சொந்தமானவனும் தமிழனே..

துருக்கி நாட்டிலிருந்து பிறந்த இந்திக்கு இவ்வளவு இறுமாப்பு இருப்பின் தமிழனுக்கு எப்படி இருக்குமென சற்று சிந்தியுங்கள்.

தமிழன் என்ற செருக்கு எங்கள் ரத்தத்தில் உண்டு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.