வழமைக்கு திரும்பியது… யாழிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் இரவு ரயில்!
1 min read
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் இன்று (25) முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதன்படி இலங்கை ரயில்வே திணைக்களத்தின் வடக்கு மார்க்கத்துக்கான அத்தனை ரயில்களும் இன்றுமுதல் பயணத்தை ஆரம்பித்துள்ளன.
கடந்த 18 முதல் காங்கேசன்துறை- கொழும்பு ரயில் சேவையில் உத்தரதேவி, யாழ்தேவி ரயில்களே சேவையில் ஈடுபட்டன.
இந்நிலையில ஏனைய ஸ்ரீதேவி ரயில், குளிரூட்டிய ரயில், தபால் ரயில் என்பன இன்று முதல் வழமைபோல சேவையில் ஈடுபட தொடங்கியுள்ளன.
தபால் ரயில் இன்று முன்னிரவு ஏழு மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.