March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

யாழில் மரத்தில் புத்தரை பதித்த மர்மநபர்கள்!

இலங்கையை இது ஒரு சிங்கள பௌத்த நாடு என காட்டுவதற்குரிய முயற்சிகளின் தந்திரமாக தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றது.

அது மாத்திரம் அல்லாமல் மத அடையாள சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமை தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் புத்தூர் நிலாவரை கிணறு யாழின் மிகப்பெரும் தொன்மை வாய்ந்ததாகும். இதன் வராலறும் மிகபெரியதாகும்.

அரசர்கள் ஆண்ட காலப்பகுதியில் இருந்து , பல புராண வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது நிலாவரை கிணறு.

இந்நிலையில் அங்குள்ள அரசமரம் ஒன்றில் சில மர்ம நபர்கள் புத்தர் உருவத்தினை பதித்து சென்றுள்ள நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களின் முன்னர் நிலாவரை கிணற்றினை அண்டிய பகுதிகளில் தொல்லியலாளர்கள் ஆய்வு செய்திருந்த நிலையில், நில ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என பலரும் கூறிவருகின்றனர்.

இதேவேளை தமிழர் பகுதிகளின் பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் வந்து தோண்ட ஆரம்பித்து உள்ளதாக கூறிய தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் , இன்னும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேறு ஏதோ வெளிவரலாம் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.