March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்… இவர்வேற  இணைந்து இருக்காரே… 

அவர் உடனடியாக அணியில் இணைந்து, அடுத்து வரவுள்ள ஐபிஎல் ஏலம், வீரர்களுக்கான கோச்சிங், அணியின் நிலைப்பாடு, வீரர்கள் தேர்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக முன்னாள் இலங்கை கேப்டன் குமார சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2021 சீசனுக்காக தயாராகி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் கேரள அணியில் கேப்டனாக சாம்சனின் செயல்பாட்டை அடுத்து அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அணியின் கிரிக்கெட் இயக்குநராக முன்னாள் இலங்கை கேப்டன் குமார சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் உடனடியாக அணியில் இணைந்து, அடுத்து வரவுள்ள ஐபிஎல் ஏலம், வீரர்களுக்கான கோச்சிங், அணியின் நிலைப்பாடு, வீரர்கள் தேர்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார்.

இந்நிலையில் மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக உள்ள சங்ககாரா, இந்த புதிய சவால் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

உலக அளவில் சிறந்த வீரர்கள் அணியில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள சங்ககாரா, அணியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சங்ககாரா போன்ற சிறப்பான வீரருடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அவரிடம் கற்று கொள்வது மிகவும் சிறப்பானது என்று அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
இலங்கையை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் அவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.