February 26, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் இரு மர்மப்பந்துகள் – நடந்தது என்ன ?

(செ.தேன்மொழி)

கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தின் வளாகத்தில் டெனிஸ் பந்துக்குள் போதைப்பொருட்களை வைத்து வீசிய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் விசேட விசாரணைக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

வெலிக்கந்த – கந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடைமையில் ஈடுபட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சிகிச்சை நிலையத்தின் வளாகத்திலிருந்து , இரு டெனிஸ் பந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அந்த பந்துகளை பரிசோதனை செய்து பார்த்தப்போது , அவற்றுக்குள் மறைத்துவைக்கப்ட்டிருந்த ஹெரோயின் , கஞ்சா மற்றும் புகையிலையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் யாருக்காவது வழங்கும் நோக்கத்திலேயே அந்த போதைப் பொருட்கள் அடங்கிய பந்து வீசப்பட்டிருக்கும் என்று சந்தேக எழுந்துள்ளதுடன் , இவ்வாறு இந்த பந்தை எறிந்தவர்கள் தொடர்பில் விபரங்கள் தெரியவந்தால் அவர்களை கைது செய்து கடுமையான சட்;டநடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.