March 2, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

காளியம்மனின் பாணி மருந்தை குடித்தவர்களிற்கும் ஏன் கொரோனா வந்தது தெரியுமா?

தம்மிக்கவின் வீட்டின் முன் பாணி மருந்திற்காக கூடியிருப்பவர்கள் தன்னிடம் கொரோனா பாணி வாங்கி அருந்தியவர்கள், ஆசாரமாக இருக்காததாலேயே கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளதாக கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலை, நெலுந்தெனிய, உடுகும்புர பகுதியை சேர்ந்த தம்மிக்க பண்டார, தனது கொரோனா பாணியினால் சர்ச்சைக்குரிய மனிதரானார், காளியின் ஆசீர்வாதத்தினால் அந்த பாணியை தயாரித்ததாக அவர் கூறினார்.

எனினும், அவரது பாணியை அருந்திய இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றிற்குள்ளானார், கேகாலை பிரதேச சபை உறுப்பினர் ஷிரந்த விஜேபாலவும், அவரது குடும்பத்தினரும் தொற்றிற்குள்ளானார்கள்.

தம்மிக பண்டாரவின் வீடு எனது வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் டிசம்பர் 8 அன்று பாணியை எடுத்துக் கொண்டேன்.

ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு நான் கொரோனா தொற்றிற்குள்ளானேன். இந்த மூட நம்பிக்கைகளில் யாரும் நம்பிக்கையை வைத்திருக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்’’ என்று அவர் கூறினார்.

கொரோனா பாணி என பலரும் அதை கிண்டல் செய்தாலும், கால் போத்தல் (175 மில்லிலிட்டர்கள்) ரூ .2,500 க்கு அமோக விற்பனை நடந்துள்ளது.

இதேவேளை, தம்மிக்கவின் பாணியை ஆய்வு செய்த நிபுணர்குழு உறுப்பினர் ஒருவர், பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளின்படி பாணி தயாரிக்கப்படவில்லை என்று கூறினார்.

பாணி தயாரிக்கப்பட்ட இடத்தை நாங்கள் பார்வையிட்டோம். எங்களுக்கு அனைத்து பொருட்களும் காட்டப்படவில்லை. இது மசாலா மற்றும் ஜாதிக்காய் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றின் கலவையாக இருந்தது’’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உறுப்பினர் கூறினார்.

இதற்கெல்லாம், தம்மிக்க அசால்ட்டாக பதிலளித்துள்ளார்.

இந்த பாணிக்கு எந்த சூத்திரமும் இல்லை, இது காளியம்மனால் எனக்கு அருளப்பட்ட சக்தி என கூறியுள்ளார்.

பாணி அருந்தியவர்கள் கொரோனா தொற்றிற்குள்ளானது குறித்து பதிலளித்த போது, “நான் காளி அம்மாவின் தெய்வீக உதவியுடன் இந்த பாணியை உருவாக்குகிறேன்.

இதை எடுத்துக் கொள்ளும் மக்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், இரண்டு நாட்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் இறைச்சிகளை சாப்பிட்டால், ஆன்மீக சக்திகளின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து சக்தியிழந்து விடும். நான் இந்த மருந்தை தயாரிக்கவில்லை.

காளியம்மனே மருந்தை தயாரித்தார். நான் அதை விநியோகிப்பதில் மட்டுமே ஈடுபட்டுள்ளேன்”என பீதியூட்டும் பதிலை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.