ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு
1 min read
Published by T. Saranya on 2021-01-21 17:24:41
(எம்.எப்.எம்.பஸீர்)
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் மூவரையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மேலதிக நீதிவான் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.